உலகெல்லாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவனான சிவ பெருமான், தன் திருவாயால், "என் அம்மை" என்று சொல்லும் பேற்றினைப் பெற்றவர் ; பிறந்த குலமான நகரத்தார்களுக்கு “செல்வம் போன்றவள்” என்று போற்றப்படுபவர் ; அறுபத்து மூவரில் அனைத்து அடியார்களும் நிற்க்க, அமர்ந்த கோலத்துடன் காட்சி அளிக்கும் பெருமைக்குரிய நாயன்மார் காரைக்கால் அம்மையார் . நகரத்தார் சமூகத்தின் பழக்க வழங்களையும், அம்மையாரின் வாழ்க்கை நிகழ்வுகளையும் தன் பெரியபுராணத்தில் மிக அழகாக படம் பிடித்து காட்டிருக்கிறார் திருசேக்கிழார். அம்மையார், 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. முதன் முதலில் பதிகங்களை இயற்றிய முன்னோடி, ஆதலால் அவரது 143 பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள் என விளங்கப்பெறுகிறது..
“கணவனே கண் கண்ட தெய்வம்” என்ற போதிலும், இறைவன் மீது ஒவொருநாளும் மிக அன்பு பெருகி தம் இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு உணவும், ஆடையும் கொடுத்து, சிவ தொண்டினை செய்து வந்தார் புனிதவதியார். ஒரு நாள், பரமதத்தனுக்கு நன்கொடையாக வந்த இரண்டு மாம்பழங்களையும் தன் இல்லத்திற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அதை பெற்றுக்கொண்டு ஓர் இடத்தில் வைத்துவிட்டு தன் கணவனுக்கு மத்திய உணவை தயார் செய்து கொண்டிருந்தார், அப்போது சிவ அடியார் ஒருவர் அங்கு வர, சமையலை பாதியில் நிறுத்திவிட்டு அடியாரை வரவேற்று, இருத்தினார் .உணவு தயார் ஆகாத நிலையில், வைத்திருந்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றை சிவ அடியார்க்கு அன்போடு கொடுத்து அனுப்பிய பின் சமயலை தொடர்ந்த்தார். பரமதத்தன் வீடிற்கு வந்து மத்திய உணவை சாப்பிட்ட பிறகு தான் கொண்டுதானுப்பிய மாம்பழத்தையும் சுவைத்து மகிழ்ந்தான். அப்போது இரண்டாவது பழத்தையும் கொண்டுவரும் படி கூறினான், புனிதவதியார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உள்ளே சென்றார் , ஆசையாய் , அன்பாய் கேட்ட கணவரிடம் இல்லை என்று எப்படி சொல்வது என்று தம்மையும் வந்து உதவியருளுமாரு சிவ பெருமானிடம் வேண்டினார். அவன் திருவருளால்,அம்மையாரது திருக்கையினிடத்து மிக இனிமை பொருந்திய தொரு மாங்கனி வந்து பொருந்தியது புதிதாக வந்த மாங்கனியை பரமதத்தன் சுவைத்து விட்டு, "இது முன்பை விட இன்னும் சுவையாக இருக்கிறதே?" என்று திரும்ப திரும்ப கேட்க, புனிதவதியார் உண்மையை கூற, பரமதத்தன் கேட்டு நகைத்தான். இச்செயல் நடைமுறைக்கு ஒவ்வாது என்று பரமதத்தன் மீண்டும் ஒரு பழம் தன் மனைவிடம் சிவ பெருமானிடம் பெற்று தரும் படி கேட்டான், புனிதவதியார் தன்னை புனிதம் ஆக்குவதற்ற்க்காக மீண்டும் ஒரு பழம் கேட்டு பெற்றாள். ஆனால் பரமதத்தன் அதை தொட நினைத்ததும் மாயமாக மறைத்தது. அந்த நிமிடமே, பரமதத்தன் தன் மனைவிடம் வாழ தகுதி இல்லை என்று நினைத்து, கடல் கடந்து வாணிபம் செய்ய வேண்டும் என்று புனிதவாதியாரை பிரிந்தான். பின் வெளிநாட்டிற்க்கு சென்று பல பொருள் தேடி மீண்டும் பாண்டியநாட்டுக்கு சென்று, அங்கு மறுமணம் செய்து கொண்டான். பல வருடங்களுக்கு பிறகு பரமதத்தன் மதுரையில் இருப்பதாக தெரியவர புனிதவதியாரை பாண்டியநாட்டிற்கு அழைத்து சென்றார்கள் தனது சுற்றத்தார்கள். பரமதத்தன் இதை அறிந்தவுடன் தன் இரண்டாவது மனைவி குழந்தையுடன் சென்று பார்த்து மனம் உருகி மூவரும் புனிதவதியார் அடி வீழ்ந்தார்கள். இச்செய்கைகளைக் கண்டு நிற்கும் சுற்றத்தார்களும் நாணமுற்று, “பரமதத்தனே! நீ உன் அழகிய மனைவியை வணங்குவது என்னவோ? என்று வியப்புறக் கேட்டனர்."இவர் என் மனைவி அல்லர் இவர் தெய்வம், நீங்களும் வணங்க வேண்டும் " என கூறினான். இதுவரை ஒரு வார்த்தை பேசாத புனிதவதியார், "தசை பொருந்திய அழகு மிகுந்த உடலால் இனி யாவது என்? மேல் உலகத்தில் உன் திருவடிகளை போற்றும் பேய் வடிவினை இந்த அடியேனுக்கு தந்தருள வேண்டும் " என்று வேண்ட மறுகணமே தில்லையில் வாழும் கூத்தப்பெருமான் உயர்ந்த நெறியை அடையும் உணர்வு பொங்கி வர, தாம் வேண்டிய அதனையே பெறுவாராய், உடம்பில் தசையும் அதன்வழி வெளிப்பட்டு நிற்கும் அழகும் ஆகிய இவற்றையெல்லாம் உதறி, எலும்பே உடம்பாக வானுலகம் மண்ணுலகம் எல்லாம் வணங்கத்தக்க பேயாகிய சிவகணத்துள் ஒன்றான நிலைமையைப் பெற்றார்.
ஞானம் என்பது அகத்தில் தோன்றுவது, புறத்தில் அன்று. சுற்றத்தார்கள் அனைவரும் அம்மையாரின் பேய் உருவத்தை கண்டு அஞ்சியும், வணங்கியும் அகன்றனர். பிறகு அம்மையார் இறைவனை போற்றியும், வாழ்க்கை நிலையாமையையும் தனது "அற்புதத் திருவந்தாதி", "இரட்டை மணிமாலையினையும்", போன்ற பதிகங்களை பாடி உள்ளம் மகிழ்ந்தார். பிறகு கயிலாயம் சென்று, மிதிக்க அஞ்சி, தலைகீழாக நடந்து , இறைவனை கண்டார். "என் அம்மையே! எம்மிடம் வேண்டுவது யாது ?" என்று உமையுடன் காட்சி அளித்த சிவபெருமான் வினாவினார். என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், “இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்” என்று வேண்டினார். இறைவரும் “பழையனூர் என்னும் பழம் பதியில் உள்ள திருவாலங்காட்டில், நாம் ஆடுகின்ற பெருங்கூத்தைக் கண்டு, எப்பொழுதும் மகிழ்வுடன் கூடி எம்மைப்பாடிக் கொண்டு இருப்பாயாக!” என்று அருளினார்.
இறைவரிடம் விடை பெற்று கொண்டு, திருவாலங்காடு எனும் நல்ல திருப்பதியைத் தலையினால் நடந்துசென்று, கோயிலுள் புகுந்து, அப்பெருமானின் திருமுன்பு அடைந்தார். இவ்வாறு வந்தடைந்த திருவாலங்காட்டில், மேலுள்ள அண்டங்களைப் பொருந்த நிமிர்ந்து ஆடுகின்ற திருக் கோலத்தைக் கண்டபொழுது `கொங்கை திரங்கி` எனத் தொடங்கும் மூத்த நற்பதிகத்தை தொடங்கி சில நாள் கழிந்து , `எட்டி இலவம் ஈகை` என்னு திருப்பதிகத்தையும் இறுதி பாடலாக பாடி, பங்குனி ஸ்வாதி அன்று முக்தி பெறுகிறார்.
பெருக்கெடுத்த கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமான், `அம்மையே` என இனிய மொழியால் அழைத்த அருளப் பெற்றாரை, அப்பெருமான் மகிழ்ந்தாடும் திருக்கூத்தில் எடுத்தருளுகின்ற திருவடிக்கீழ் என்றும் இருக்கின்றாரைப், பொருந்திய பெருஞ்சிறப்பினை எடுத்துப