இருபெரும் உருவங்கள்:
சைவ நெறியில் இறைவனை மூன்று வடிவமாக வழிபடுகிறோம் - அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு, உருவ வழிபாடு. அருவம் என்றால் உருவம் இல்லாத வழிபாடு. அருவுருவம் என்றால் அருவமும் அல்லாத உருவமும் அல்லாத சிவலிங்க வழிபாடு. உருவம் என்றால் உருவ வழிபாடு, ஆனால் எப்படிப்பட்ட உருவத்தை வழிபடுவது? இறைவன் நம் சிற்றறிவுக்கு ஏற்றவாறு சற்று கீழ் இறங்கி அறுபத்திநான்கு உருவங்களின் மூலம் காட்சி அளிக்கிறான். அதில் மிக சிறந்த உருவம் ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவக்கோலம்.
ஆகமம் முறை படி ஆலயத்தில் மூல நாதர் எப்பவுமே சிவலிங்க வடிவத்தில் தான் இருக்கும். சிவபெருமானின் இலிங்க வடிவத்திற்கான காரணத்தை பல சித்தாந்த/வேதாந்த கருத்துக்கள் இருந்தாலும், தமிழர்களின் நெறியான சைவ சித்தாந்தம்/திருமுறைகள் தான் நமக்கு அடிப்படை ஆதாரம், அதுவே நமக்கு சரியான பதில் அளிக்க முடியும். இலிங்கம் என்ற உருவத்திற்கு தொடக்கம் முடிவு கிடையாது. பேர் அண்டமே இலிங்கவடிவில் (cosmic egg) தான் இருக்கிறது, அண்டத்தில் விண்மீன்கள் (Galaxies) முதல் நம் உடம்பு, ஆத்துமா வரை எல்லாம் இலிங்க வடிவில்தான் இருக்கிறன்றது என்கிறது திருமந்திரம்.
இருபெரும் விழாக்கள்:
இவ்விரு பெரும் சிவ உருவங்களே வழிபாட்டிற்கு உகந்தவை என்று போற்றி நம் முன்னோர்கள் இரு பெரும் விழாவை இயற்றினர். அதில் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை; சிவலிங்கத்தின் பெருமையையும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை(ஆருத்ரா தரிசனம்) நடராஜரின் பெருமையையும் சைவர்களால் கொண்டாடப்படும் மிகச்சிறந்த திருவிழாக்கள் ஆகும்.
இருபெரும் தலங்கள்:
திருவண்ணாமலை (Agni Lingam):
பஞ்ச பூதங்களை நாம் இலிங்க வடிவில் வழிபடுகிறோம். அக்னீ இலிங்கம் (திருவண்ணாமலை), மணல் இலிங்கம் (காஞ்சி), காற்று இலிங்கம் (திருகாளஹஸ்தி), ஜல இலிங்கம் (திருவானைக்கா), ஆகாய இலிங்கம் (சிதம்பரம்).
பஞ்ச பூதங்களில் “தீ” சிறப்புக்குறியது, ஏனென்றால் அக்னீ ஒன்றுதான் புவீ ஈர்ப்பு சக்திக்கு எதிரே செல்லக்கூடிய ஒரே பொருள்(element). இறைவன் இத்தீ போன்ற தன்மை நம்மளுடைய பிறவி வினைகளை எரித்துவிடுவார் என்பது குறிப்பு.
சிதம்பரம் (Nataraja):
நடராஜர் திருமேனியும், சிவலிங்கத்திருமேனியும் ஒன்றே என்கிறார் திருமூலர். இந்த பிரபஞ்சத்தில், உள்ள சிறி துகள் ‘அணு’, அதை நூறு கூறுகளால் பிரித்தாளும், அதனிலுள் ஏதோ ஒன்று அதை சுற்றி(ஆடி) கொண்டுதான் இருக்கும். அந்த ஆட்டத்தினால் தான் ஈர்ப்பு சக்தி(Bonding) பிறக்கிறது. இந்த ஆட்டம் நின்றுவிட்டால் எல்லாம் நின்று விடும்.
நடராஜரின் உருவத்தில் ஐந்து தொழில் இருக்கிறது: படைத்தல், அழித்தல், காத்ததால், மறைத்தல், அருளல் (பஞ்சகிருதி).