"கொடுத்தால் விளையும், எடுத்தால் அழியும்!!" என்னும் தாரக மந்திரத்தோடு வாழ்ந்து, சிவ ஞானம் பெற்று, துறவிகளுக்கே இலக்கணமாக திகழ்ந்தவர் நமது பட்டினத்து செட்டியார்.
பட்டினத்தாரின் இயற் பெயர் திருவெண்காடர். பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்த இவர், தனது மகன் மருதவாணன் கொடுத்த "காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்ற வாசகத்தால் ஈர்க்கப்பட்டு, தனது கோடான கோடி செல்வத்தையும் துறந்து துறவியானார்.
பட்டினத்தார் வரலாற்றில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும்? நிலையில்லாத செல்வதை பெருகுவத்திலேயே நம் வாழ்க்கையின் பெரும் பகுதியான நேரத்தை செலவிடுகிறோம் ஆதலால் தேவைக்கு அதிகமான பொருளை சேர்த்து வைத்து கொள்ளவதினால் இந்த ஆத்மாவுக்கு எந்த பயனும் இல்லை.
ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, உயர் செல்வ மெல்லாம்
அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், நல் அறமும் நட்பும்
நன்று என்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்று என்று இரு, மனமே உனக்கே உபதேசம் இதே. - பட்டினத்தார்